`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!’ – பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

Spread the love

வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை.

பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி

பிரேமலதா – எடப்பாடி பழனிசாமி

பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா?

இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *