`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!’ – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர் | dmk person accuses same party men for not putting salary in local body work

Spread the love

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின் தந்தை சுந்தரமூர்த்தி திமுக-வில் கிளைச் செயலாளர், வர்த்தக அணி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். அதே ஊராட்சியான குமணந்துறையில், தினேஷ் வாட்டர் டேங்க் ஆப்ரேட்டராக இருக்கிறார்.

ஊராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக சுந்தரமூர்த்திக்கும், திமுகவின் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த காழ்ப்புணர்ச்சியில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி குமார், ஐந்து வருடங்களாக தினேஷ்க்கு சம்பளம் போடாமல் செய்து விட்டார் என்கிறார்கள். சொந்தக் கட்சிக்காரர் என்பதை கூட பார்க்காமல் குமார் செய்த செயலால் பொருளாதார ரீதியாக கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக சுந்தரமூர்த்தியும் அவரது மகன் தினேஷும் புலம்பி வருகின்றனர்.

சம்பளம் கேட்டு போராடி வரும் தினேஷ்

சம்பளம் கேட்டு போராடி வரும் தினேஷ்

இது குறித்து தினேஷிடம் பேசினோம், “எங்களோடது தீவிரமான திமுக குடும்பம். என்னோட அப்பா சுந்தரமூர்த்தி 1996 முதல் 2006 வரை தொடர்ந்து இரண்டு முறை மணலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். 2019ல் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு என் அம்மா விஜயகுமாரியை போட்டியிட வைத்தார். இதே போல் திமுக துணை ஒன்றிய செயலாளர் குமார் அவரது மனைவி சுமதியை நிறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *