சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் உரையாற்றினார். அப்போது அவர், “எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பாமக கட்சி. அரை நூற்றாண்டு காலம் மக்களுக்காக போராடி போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மன உளைச்சலில் இருக்கிறார். சாதாரண மன உளைச்சல் அல்ல. இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம்? ராமதாஸ் அய்யா இருக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருந்தது. கட்டுப்பாடாக வைத்திருந்த நிலையில் அதை மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சித்து வருகிறது.
