தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம் | delay in dgp appointment eps slams cm over people security

1380476
Spread the love

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: தமிழகத்​தில் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி-​யின் பதவிக்​காலம் கடந்த ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்​து​விட்​டது. இந்​நிலை​யில், தங்​களுக்கு ஏற்ற நபரை, தேர்​தல் நேரத்​தில் தங்​களுக்கு உதவி​யாக இருக்​கும் அதி​காரி​யாக இருக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில், வெறும் தேர்​தல் ஆதா​யத்​துக்​காக, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்​டிய காவல் துறைக்கு முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் இழுத்​தடித்​து, தமிழக மக்​களின் பாது​காப்​போடு விளை​யாடிக் கொண்​டிருக்​கிறார் முதல்​வர் மு.க ஸ்டா​லின்.

புதிய டிஜிபி-க்​கான 3 பெயர்​கள் கூட இறுதி உத்​தேசப் பட்​டியலை யுபிஎஸ்சி அனுப்​பி​விட்​ட​தாக செய்​தி​கள் வரும் நிலை​யில், மூவரில் ஒரு​வரை புதிய டிஜிபி​யாக நியமிப்​ப​தில் முதல்​வருக்​கும், அவரின் திமுக அரசுக்​கும் என்ன சிக்​கல் இருக்​கிறது?

இந்த அவல நிலை​யில், காவலர்​கள் வீர​வணக்க நாளில் மட்​டும் போட்​டோஷூட் எடுத்​துக்​கொள்ள ஆர்​வ​மாக கலந்​து​கொள்​வது வேடிக்​கை​யின் உச்​சம். அது​வும் கருப்​புப் பட்டை வேறு. இந்த பட்​டைக்கு ரத்​தக் கொதிப்பு தான் காரணமா என்று சட்​டப்​பேரவை தலை​வர் அப்​பாவு கேட்​பாரா அல்​லது இதை சிறைக் கைதி சீருடை என்று அமைச்​சர் ரகுபதி சொல்​வா​ரா? இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *