அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுத்தனர், நிர்வாகிகள். தினகரனைப் புகழ்ந்து ஃப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். ஏற்கெனவே அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டனர். செக்யூரிட்டிகள், பவுன்ஸர்ஸ் பாதுக்காப்புப் பணியில் ஈடுப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தினகரனைப் புகழ்ந்த பின்னர் கருத்துக்களை முன் வைத்தனர்.

நிர்வாகிகளைத் தொடர்ந்து பேசிய டி.டி.வி.தினனரன், “தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அது என்றைக்கும் தொடர வேண்டும். தமிழகத்தில் எந்தவொரு காரணத்தையும் கொண்டு, அது தேர்தல் வெற்றி அல்லது தங்களது கொள்கைகளுக்காக சாதி, மதம், கடவுகளின் பெயரை எந்தவொரு அரசியல் இயக்கமும், எந்தவொரு அமைப்பும் பயன்படுத்தி, மதங்களைக் கடந்து நட்போடு வாழ்கின்ற மக்களுக்குள் எந்தவொரு குழப்பமும் ஏற்படுத்தி விடக் கூடாது. தமிழகத்தின் பொது அமைதி கெட்டுவிடக் கூடாது என்பதற்காக தேர்தல் வெற்றி, தோல்வியைத் தாண்டிச் செயல்படுகிற இயக்கம் அமமுக.