தேர்தல் வெறும் கொண்டாட்டமல்ல; சமூக நலனை மனதில் வைத்து வாக்களிப்பது எப்படி? | My Vikatan author shares about election views

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

தேர்தல் : தேசத்தின் நெஞ்சில் துடிக்கும் ஜனநாயக இதயத்துடிப்பே “தேர்தல்”. மக்கள் விருப்பம், மக்கள் குரல், மக்கள் கனவு ஆகிய மூன்றையும் ஒன்றுபடுத்தி உயர்ந்த இடத்தில் நிற்கும் புனிதமான செயல்பாடாக அதை நாம் கருதுகிறோம். வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும்,தங்கள் விரலின் நுனியில் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை வரைகிறார்கள். 

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளிலும் ஒரு வருத்தமான கணம் நமது சமூகத்தில் தோன்றுகிறது “வாக்குப்பதிவு”.

ஒரே ஒரு வாக்கு, ஒரு அரசின் பாதையை மாற்றும் சக்திக் கொண்டது. ஒரு விரல், ஒரு தலைமுறையின் திசை திரும்பும் அழைப்பு சின்னமாகிறது. தேர்தல் நாளில் நீட்டப்படும் விரல்கள், வெறும் மை தடவப்பட்ட விரல்கள் அல்ல; அவை ஒரு கிராமத்தின் குரல்,ஒரு பெண்மணியின் போராட்டம், ஒரு மாணவரின் கனவு, ஒரு தொழிலாளியின் நம்பிக்கை, ஒரு தேசத்தின் தன்னம்பிக்கை, ஒரு நாட்டின் ஒழுக்கம், ஒரு சமூகத்தின் சுய மதிப்பு, ஒரு குடிமகனின் முழுமையான அடையாளம். 

என் அனுபவம்:

என் வாழ்க்கையில் பல தேர்தல்களை பார்த்திருக்கிறேன். வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் முதியவர்கள், குழந்தையைக் கையில் தூக்கி வரும் தாய்மார்கள், முதல் வாக்கு போட வருவதாக உற்சாகம் காட்டும் இளைஞர்கள். அனைவரும் ஒரு விஷயத்தை எளிதாக உணர்த்தினார். வாக்கு என்பது சாதாரண நடவடிக்கை அல்ல, அது உணர்ச்சியும்,உறுதியும்,உரிமையும் கலந்து மக்களின் புனித தருணம். ஒரு மை தடவப்பட்ட  விரல் பல தசாப்தங்களாக இந்த நாட்டை தாங்கும் குரல்களின் சின்னம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *