அவர்களுக்கு ஆதரவாக பேசும் மாணவர்களுக்காக, அனைத்து சமரசங்களையும் செய்து கொள்கிறார்கள் -தேர்வு அறைகள் உட்பட. அப்படித்தான் இந்த மாணவருக்கு தேர்வு அறையில் செல்போன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் அந்த மாணவரைவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது, தேர்வு அறையில் இருந்த அந்த பேராசிரியர் மீதுதான்,” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க தெற்காசியத் துறையின் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ஐ. ஹுமாயுனை தொடர்பு கொண்டபோது, “நானும் அந்த பதிவைப் பார்த்தேன். அந்த மாணவர் என்னுடைய துறையைச் சேர்ந்தவர்தான். ஆனால் அன்றைய தினம் அந்தத் தேர்வு என்னுடைய துறையில் நடக்கவில்லை. அந்த மாணவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னுடைய துறையில் நடக்காத தேர்வுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்றார்.

அதையடுத்து பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளரும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான மகேஷை தொடர்பு கொண்டபோது, “அதுகுறித்து விசாரித்துவிட்டு உங்களை மீண்டும் அழைக்கிறேன்” என்றார்.
மீண்டும் நம் இணைப்பில் வந்த அவர், “இந்த மாணவர் எம்.ஏ. தெற்காசியத் துறையைச் சேர்ந்தவர். கடந்த 26-ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் ‘மல்டிமீடியா டூல்ஸ்’ என்ற தேர்வை முழுமையாக எழுதி முடித்துவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பேனாவை அங்கு மறந்துவிட்டார்.
அதை எடுத்துக்கொள்ளத்தான் மீண்டும் தேர்வு அறைக்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய விடைத்தாளை புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அதனால் தேர்வு அறைக்குள் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேர்வு அறைக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை” என்றார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த விடைத்தாளுக்குக் கீழே வினாத்தாளும் இருப்பதால், பல்கலைக்கழகத்தின் விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதேபோல், “தேர்வை முடித்துவிட்டு சென்ற ஒரு மாணவரை மீண்டும் செல்போனுடன் தேர்வு அறைக்குள் அனுமதிப்பதும், அவரது கைக்கு விடைத்தாளை வழங்குவதும் சரியான அணுகுமுறையா எனும் கேள்விக்கு பதிலளித்து, பல்கலைக்கழகம் தன்னுடைய நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையும் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.