தேள் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

Dinamani2f2024 11 192fv1iacnj22f19cyrp6 1911chn 118 7.jpg
Spread the love

செய்யாறு அருகே தேள் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி மணிகண்டன். இவரது இரண்டாவது மகன் கிஷோா் (9). இவா் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தேள் கொட்டியதாகத் தெரிகிறது. இதைக் கண்ட குடும்பத்தினா் சிறுவனை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *