தேவநாதனின் இடைக்கால ஜாமீன் நவ.7-ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders devanathan interim bail extended till Nov 7

Spread the love

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாத வின் இடைகால ஜாமீனை நவ.7-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்ம னென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தாக நிதி நிறுவனத்தின் இயக் குநர் தேவநாதன் யாதவ் உள் ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி 3-வது முறையாக தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதி பதி,அக்.30-ம் தேதி வரை இடைக் கால ஜாமீன் வழங்கி உத்தர விட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி கே.ராஜசே கர் முன்பு விசாரணைக்கு வந்த போது, தேவநாதன் யாதவ் தரப் பில் இடைக்கால ஜாமீனை நீட் டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் வழக் கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, தேவநாதன் யாதவின் 76 சொத் துகள் பட்டியலில் 27 சொத்து கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவ தாக தெரிவித்தார்.

பாதிக்கபட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, “சொந்த பணமாக ரூ.100 கோடியை திரட்டி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், ரூ. 1 கூட நீதி மன்றத்தில் தேவநாதன் யாதவ் டெபாசிட் செய்யவில்லை. எனவே, ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கபட்டது.

முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.திருமூர்த்தி ஆஜ ராகி ஜாமீன் நீட்டிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, தேவநாதன் யாதவ் சரணடைய மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதி பதி, ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந் திரன் முன்பு வழக்கை பட்டிய லிட பதிவுத்துறைக்கு உத்தர விட்டு, விசாரணையை நவ.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *