தேவநாதன் யாதவின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு | Judge orders filing of assets details of Devanathan Yadav

1368959
Spread the love

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருடைய சொத்து விவரங்​களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக, அந்​நிறு​வனத்​தின் இயக்​குனர் தேவ​நாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உள்பட 3 பேர் தாக்​கல் செய்த மனுக்​கள் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் 2 முறை தள்​ளு​படி செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது, மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி மனு​தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்​திரையன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, முதலீட்​டாளர்​கள் சங்​கம் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் திரு​மூர்த்​தி, தேவ​நாதன் யாதவ் முதலீட்​டாளர்​களிட​மிருந்து ரூ. 680 கோடிக்​கும் மேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக​வும், சென்​னை​யில் அண்ணா சாலை, மயி​லாப்​பூர், அண்​ணாநகர் மட்டுமின்றி ஆஸ்​திரேலியா போன்ற வெளி​நாடு​களி​லும் கோடிக்​கணக்​கில் சொத்​துக்​களை வாங்கி குவித்​துள்​ளார் என்​றும், அதற்கான ஆதா​ரங்​களு​டன் அறிக்கை தாக்​கல் செய்​துள்​ள​தாக​வும், எனவே, முதலீட்​டாளர்​களுக்கு சேர வேண்​டிய தொகையை திருப்பி கொடுக்​கும் வரை ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என ஆட்​சேபம் தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி​யுள்ள தேவ​நாதன் யாத​வின் சொத்து விவரங்களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை வரும்​ 17-க்​கு தள்​ளி வைத்​தார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *