தேவா இசை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Dinamani2f2024 052fbc3e3ab2 Fe39 48af B6ca 88695a84f6fd2ftraffic Constables.jpg
Spread the love

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி 15.02.2025 அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிற்பகல் 3 மணி முதல்நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டென்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.

இதையும் படிக்க: மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!

சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் “யு” டேர்ன் (வளைவு மூலம்) லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

அண்ணா சாலையில் உள்ள ஒய்எம்சிஏ பிரதான சாலை நுழைவுவாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப்சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.

அண்ணாசாலையில் மதியம் 2 மணிமுதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *