தேவி விருதுகள் 2025 தொடங்கியது!

Dinamani2f2025 01 282fkcy2ztlw2f1f52e052 F199 4701 8f05 6c034a8911a0.jpg
Spread the love

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 31-வது தேவி விருதுகள் விழா செவ்வாய்க்கிழமை (ஜன.28) தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சென்னை கிண்டியிலுள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 11 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருது வழங்கப்படுகிறது.

இந்த விழாவை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் மருத்துவர் ப்ரீத்தா ரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோர் உடனிருந்தனர்.

விருது பெறுபவர்கள்

கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் அருந்ததி சுப்ரமணியம், நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், கல்வியாளர் டாக்டர் சுதா சேஷய்யன், இசைக்கலைஞர் கதீஜா ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

மேலும், கல்வியாளர் ஓமனா தாமஸ், அர்ஜுனா விருது பெற்ற பாராலிம்பிக்ஸ் வீராங்கனை ஜெர்லின் அனிகா, தொழிலதிபர் டாக்டர் லட்சுமி வேணு, சோல்ஃப்ரீ அறக்கட்டளை இணை நிறுவனர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், தொழில்முனைவோர் ராஜவள்ளி ராஜீவ் மற்றும் சுசித்ரா பாலசுப்பிரமணியன் ஆகியோர் விருது பெறவுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *