தைப்பூசத் திருநாள் சிறப்புகள் – இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா? | Lord Murugan Thaipusam Festival Important Happenings

Spread the love

தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது.

முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம்.

முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது.

குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன.

தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம்
ajijchan

இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது.

தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற  முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *