தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகரான சீன தைபேயில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக மத்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீன தைபேயில் ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு கடற்கரையில் உள்ள இலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.