“தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான ‘அச்சுறுத்தலாக’ பார்க்கப்படும்?’
‘தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்’.
இது கடந்த 7-ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் சானே தகாச்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும்.
இந்த உரையாடல் தான் தற்போது ஜப்பான், சீனா இடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு ஜப்பான் பாதுகாப்பு சட்டத்தின் படி, ‘நாட்டிற்கான அச்சுறுத்தல்’ என்று ஏதாவது கருதப்பட்டால், அந்தச் சூழலுக்கு எதிராக ஜப்பான் தன்னுடைய தற்காப்பு படையை களமிறக்கலாம்.
தைவானை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பான் பிரதமர் தைவான் குறித்து இப்படி பேசியிருப்பது சீனாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.