‘தொகுதி மக்களுக்கு தவெகவின் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா வழங்கிய பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?’ |“TVK Leaders Bussy Anand and Aadhav Arjuna Distribute Gifts to Constituency People – What Were They?

Spread the love

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் வில்லிவாக்கத்தில் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தலைமையில் ஆதவ் அர்ஜூனா நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பெண் நிர்வாகிகளுக்கு ஆதவ் படமும் விசில் சின்னமும் பொறிக்கப்பட்ட டேபிள் ஃபேன்கள் பரிசுப்பொருட்களாக வழங்கப்பட்டது.

தி.நகர் தொகுதியில் போட்டியிடும் ஆனந்தும் தன் பங்குக்கு தொகுதிக்குள் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமையில் நேற்று ஒரு செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். “தி.நகர் தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளும் நமக்கு சாதகமாக இருக்கிறது. தளபதி முதலமைச்சர் ஆவது உறுதி!’ எனப் பேசிய ஆனந்த் 1000 பேருக்கு சூழலுக்கு ஏற்ற பரிசாக ‘எலெக்ட்ரிக் குக்கர்’ யைப் பரிசாக வழங்கியிருந்தார். நாளையும் இதே மாதிரியாக ஒரு கூட்டத்தை நடத்தி 400 பேருக்கு எலெக்ட்ரிக் குக்கர்களை வழங்கவிருப்பதாக கூறுகிறார் மாவட்டச் செயலாளர் அப்புனு.

தவெகவின் முக்கியஸ்தர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள்தான் பரிசு மழையை பொழிவார்கள் என எதிர்பார்க்க, தவெகவினரே கிஃப்ட் பாக்ஸ்களை இறக்குவதில் வாக்காளர்கள் டபுள் ஹேப்பி ஆகியிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *