தொகுதி மறுசீரமைப்பு : ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் | Breaking and Live Updates

Spread the love

Last Updated:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் 16,000 பெண்கள் வள்ளி கும்மி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை தவிர்க்கக் கூடியவர்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடமில்லை என்பதை நீங்கள் உணர்த்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு நாடு கலைக்குழுவினர் 2024 ஆம் ஆண்டு 16,000 பெண்கள் இணைந்து வள்ளி கும்மி ஆடி என்ன சாதனை படைத்ததற்கு இன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய தினமும் 16,000 பெண்கள் இணைந்து வள்ளி கும்மி நிகழ்ச்சி நடத்தினர். இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் நரைமேடுகள் சென்று 16000 வள்ளிகும்மி கின்னஸ் சாதனை புரிந்த பெண்களையும் பார்வையிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியன் போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளி கும்மிக்கும் நடன குழுவினர் கலக்கி விட்டீர்கள். பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என்று கலக்கி விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த கொங்குநாடு வள்ளி கும்மி கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அமோக வெற்றி கிடைத்தது 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் அது திமுக ஆட்சிக்கான நற்சான்றிதழ். 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் நமது அணி தான் வெற்றி பெறப் போகிறது. மோடி தலைமையில் இருக்கும் மத்திய அரசு நம்மை போல இல்லாமல் வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அந்த வஞ்சனையையும் கடந்து தமிழகம் இன்று முதல் இடத்தில் இருக்கிறோம்.

மத்திய அரசு முறையான நிதி வழங்கி தமிழகத்திற்கு செய்து கொடுக்க வேண்டியதை செய்து கொடுத்தால் உலக அளவில் நாம் முன்னணியில் இருப்போம். தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதியை பிரதமர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

வட மாநிலத்தில் இருக்கும் ஏழு மாநில தலைவர்கள் 3 முதலமைச்சர் பல்வேறு துணை முதலமைச்சர் கூட்டத்தையும் கூட்டி அதிலும் தீர்மானம் போட்டு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இதுவரை ஒப்புதல் வரவில்லை. இதற்கிடையில் தமிழகத்திற்கு வரும் பொழுது மறு சீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமல் தவிப்பவர்களுக்கு என்ன செய்ய முடியும்.

மேலும் தமிழ்நாட்டை தவிர்க்க கூடியவரகளுக்கு  மீண்டும் தமிழகத்தில் இடமே இல்லை என்பதை மீண்டும் நீங்கள் உணர்த்திட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *