காளியம்மாள் :
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், கடந்த தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு 14,823 வாக்குகள் பெற்றார். இந்தநிலையில், முன்னணிக் கட்சிகளில் இணைய தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இணையும் பட்சத்தில் நாகப்பட்டிணம் தொகுதியில் அவர் களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இவர்களைப் போல, கடந்தமுறை திருநெல்வேலியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இந்தமுறை சாத்தூர் தொகுதியிலும், வானூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்ட வன்னி அரசு இந்தமுறை எழும்பூர் அல்லது ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும், கடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, இந்தமுறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தமுறை திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூட ஒரு தகவல் கட்சிகள் மத்தியில் பேசப்படுகிறது.
அதேபோல, கடந்த தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இந்தமுறை ஶ்ரீவில்லிபுத்தூர் அல்லது தென்காசி தொகுதியிலும், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் இந்தமுறை திண்டுக்கல் தொகுதிக்கு மாற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, கடந்தமுறை மக்கள் நீதி மய்யம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட மருத்துவர் மகேந்திரன் இந்தமுறை கோவை தெற்கு அல்லது பொள்ளாச்சியிலும் கடந்தமுறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இந்தமுறை சிவகாசி தொகுதியிலும் 2016 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் இந்தமுறை மயிலாப்பூர் அல்லது நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.