ஆம் ஆத்மி கட்சி சிசோடியாவிற்கு பதிலாக பட்பர்கஞ்ச் தொகுதியிலிருந்து சமீபத்தில் கட்சியில் இணைந்த பயிற்சி நிபுணர் அவத் ஓஜாவை நியமித்துள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் சிசோடியா செவ்வாயன்று தனது புதிய தொகுதியான ஜங்புராவில் உள்ளூர் மக்களுடன் அனுமன் சாலிசா பாராயணத்தில் கலந்துகொண்டு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதுதொடர்பாக சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,
நாங்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் உங்களின் ஆசிரவாதங்கள் எங்களுக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேன். மனித நேயத்தின் ஒளி எப்போதும் நம் இதயங்களில் ஒளிரும். நாம் எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் கடவுளை நினைத்து அதைச் செய்கிறோம்.
ஓஜாவுக்கு பட்பர்கஞ்ச் தொகுதியை விட்டுக் கொடுத்தற்குக் காரணம் கல்வியின் மீதான அவரது பார்வை மற்றும் பக்தி தான் காரணம். தொகுதி முக்கியமல்ல.. மக்களுக்குச் செய்யப்படும் பணிதான் முக்கியம் என்று அவர் கூறினார்.
இருப்பினும், பட்பர்கஞ்ச் தொகுதியில் சிசோடிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரது பாதுகாப்பிற்காக ஜங்புராவுக்கு மாறிவிட்டதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
2020ல், பட்பர்கஞ்சில் பாஜக ரவி நேகியை எதிர்த்துப் போட்டியிட்ட சிசோடியா, வெறும் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.