இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது.