தொடக்க கல்வி துறை சார்பில் 114 அரசு பள்ளிகளுக்கு கேடயம் | Shield to 114 government schools on behalf of Primary Education dept

1337893.jpg
Spread the love

சென்னை: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொடக்கக் கல்வி துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யக்குழு அமைக்கப்பட்டது.

தேர்வு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மாவட்டத்துக்கு தலா 3 என 38 மாவட்டங்களுக்கு 114 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. சென்னையில் சைதாப்பேட்டை சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி தொடக்கப் பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை தனலட்சுமி தொடக்கப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கேடயம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. கேடயங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்க உள்ளார். 114 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *