இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:
எங்களுக்கு முடிவு வேண்டும், வெற்றி வேண்டும். பெர்த் ஆடுகளத்தில் ராகுல், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார்கள். நான் வீட்டிலிருந்தே பார்த்தேன். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார்.
இந்த நேரத்தில் அவருக்குதான் தொடக்க வீரர் என்பது பொருத்தமானதாக இருக்கும். தற்போதைக்கு மாற்றம் தேவையில்லை. வருங்காலங்களில் வேண்டுமானால் மாறலாம்.
தனிப்பட்ட விதத்தில் நான் இடம்மாறி ஆடுவது எனக்கு எளிதானது அல்ல. ஆனால், அணிக்காக என்றுவரும்போது அது சரியான முடிவாக இருக்கிறது என்றார்.