தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

Spread the love

ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகள் முதல் உலக பங்குச்சந்தைகள் வரை அனைத்தும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டிய ஒன்றையும், செய்யக்கூடாத ஒன்றையும் குறிப்பிடுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

“போர் மாதிரியான பதற்றச் சூழல்களில் ரீடெயில் முதலீட்டாளர்கள் பயந்து பங்குகளை விற்று விடக் கூடாது.

போர் தொடங்கியதும் சந்தைத் திணறுகிறது என்றால், அது உடனாடியான தாக்கம்.

எப்படியும் அந்தத் தாக்கத்தில் இருந்து சந்தை பவுன்ஸ்பேக் ஆகி வரும். அதனால், பயம் வேண்டாம்.

போர் குறித்த பல செய்திகளைக் கேட்கும்போது, பயம் வரும். ஆனால், பயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதுவரை நடந்த அனைத்து போர்களின் தாக்கத்தில் இருந்தும் சந்தை மீண்டு வந்துள்ளது. இது வரலாறு. அதனால், நிதானம் தேவை.

இது பதற்றத்தில் சந்தையில் செய்யக்கூடாத தவறு.

இப்போது செய்ய வேண்டிய‌ ஒன்று…

பங்குச்சந்தையில் லாபம் தரக்கூடிய ஒரே ஃபார்முலா – ‘இறக்கத்தில் பங்குகளை வாங்க வேண்டும்… ஏற்றத்தில் பங்குகளை விற்க வேண்டும்’.

பங்குகளை வாங்க வேண்டும் என்றால், தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

முக்கியமாக, சந்தை இறங்கும் போது, நல்ல பங்குகள் பல குறைந்த விலைக்குக் கிடைக்கும் அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.

சரி… அது தான் சந்தை இறக்கத்தில் இருக்கிறதே என்று மொத்த பணத்தையும் இப்போதே முதலீடு செய்துவிடக் கூடாது.

ஆரம்பத்தில் 15 சதவிகித தொகையை முதலீடு செய்யுங்கள். இன்னும் போர் தொடரும் என்கிற பேச்சுகள் உள்ளன.

அப்போது சந்தை இறக்கத்திற்கு செல்லும் போது, அடுத்த 15 சதவிகிதத்தை முதலீடு செய்யுங்கள்.‌ இது தான் லாபம் பார்ப்பதற்கான சூப்பர் யுக்தி”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *