அமலாக்கத்துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.