சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் நீடிக்கிறது.
கடந்த வாரம் புதன்கிழமை முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை அதன்பின்னர் ஒருவாரமாக இறங்குமுகத்தில் உள்ளது.
வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040-க்கும், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும், திங்கள் கிழமை மாற்றமின்றியும் விற்பனையானது.
தொடர்ந்து 4-வது நாளாக இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold price Today
இதையும் படிக்க : ‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!