தொடர்ந்து நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை?|Chennai, TN districts on red alert as Ditwah system stays stalled

Spread the love

டிட்வா புயலின் எச்சமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் இருந்து வருகிறது.

கடந்த 6 மணிநேரத்தில், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல், அதே இடத்தில் நீடித்து வருகிறது.

இது வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரைக்கும் 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் தென்மேற்கு திசையில் மெதுவாக நகரலாம். அடுத்த 12 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். இங்கே ‘மஞ்சள் அலர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *