தொடர் தாக்குதல்: செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Dinamani2f2024 09 122fckncp57n2f6a3811a6 Be07 4c77 93a7 F33a2619f691.jpg
Spread the love

திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து 2,500-க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 400-க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கப்பட்டு தங்களது மீன்பிடி உபகரணப் பொருள்களை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் தத்தளித்து, பின்னர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *