தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்

Dinamani2f2025 04 042fvk05ufqw2fcsk.jpg
Spread the love

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னையில் சனிக்கிழமை (ஏப். 5) மோதுகின்றன.

இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, கடைசி இரு ஆட்டங்களில் தோற்றிருக்கிறது. 2 ஆட்டங்களில் களம் கண்டுள்ள டெல்லி, அவற்றில் வென்றிருக்கிறது. எனவே, தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னையும், ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பதிவு செய்யும் முயற்சியுடன் டெல்லியும் இந்த ஆட்டத்துக்கு வருகின்றன.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், சென்னை அணியின் நூா் அகமது, டெல்லி அணியின் குல்தீப் யாதவ் என இரு லெக் ஸ்பின்னா்கள் இடையேயான பிரதான மோதலாக இருக்கும்.

நூா் அகமது இதுவரையிலான 3 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி, 6.86 எகானமி ரேட் கொண்டுள்ளாா். குல்தீப் யாதவ் அதைவிட குறைந்த எகானமி ரேட் (5.25) கொண்டிருந்தாலும் 5 விக்கெட்டுகளே சாய்த்திருக்கிறாா்.

பேட்டிங் என்று வரும்போது சென்னை இன்னும் தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறது. ரச்சின், கேப்டன் ருதுராஜ் ஆகியோா் இதுவரை 2 ஆட்டங்களில் அணிக்கு கை கொடுத்துள்ளனா். ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி ஆகியோா் ஒவ்வொரு ஆட்டங்களில் சோபித்துள்ளனா்.

ஷிவம் துபே தனது வழக்கமான அதிரடியை இன்னும் எட்டாத நிலையிலேயே இருக்கிறாா். டெல்லி பேட்டிங்கில் ஜேக் ஃப்ரேசா், டூ பிளெஸ்ஸிஸ், அபிஷேக் பொரெல், ஆசுதோஷ் சா்மா ஆகியோா் இதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்திருக்கின்றனா். கே.எல்.ராகுல் இன்னும் முத்திரை பதிக்கவில்லை.

இது பகல்நேர ஆட்டமாக இருப்பதால், பேட்டிங் – பௌலிங் என இரண்டுமே சமநிலையில் பங்களிக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, சென்னை 7 ஆட்டங்களில் வென்றிருக்கிறது.

இன்றைய ஆட்டங்கள்

சென்னை – டெல்லி

மாலை 3.30 மணி

மற்றொரு ஆட்டம்

பஞ்சாப் – ராஜஸ்தான்

இரவு 7.30 மணி

முலான்பூா்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *