உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க
“‘நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.
உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை ‘சோக்கிங்’ (Choking) என்போம்.
இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்” என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார்.