மேலும் அவர் பேசுகையில், “2018 இல் அறிமுகமானதில் இருந்து 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னரும், இந்தியாவில் எந்தவொரு பயிற்சியாளரும் தனது பந்துவீச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்தப் பந்துவீச்சு நீண்ட காலம் நீடிக்காது என்று நினைத்தனர். நான் 6-7 மாதங்கள் விளையாடுவேன் என்றும் கூறினர்” என்றார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது போட்டி பெர்த்தின் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொறுப்பு கேப்டன் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.
இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி டிசம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவிருகிறது.