தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: மத்திய அரசு

Dinamani2f2024 09 262f8u3qixwo2fcentral Government.jpg
Spread the love

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதன்படி அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,358. பகுதி திறன் உள்ளவர்களுக்கு ரூ.868 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 22,568.

திறன் உடையவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.954, மாதத்திற்கு ரூ. 24,804 என்றும், திறன்மிகுதி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1035 மாதத்திற்கு ரூ. 26,910 ஆக ஊதியம் வகுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், சுமைகளை ஏற்றி இறக்குதல், தூய்மைப் பணி, சுரங்கம் உள்ளிட்ட பலதுறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்.

தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் அக். 1 முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *