தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் ரத்து!

dinamani2F2025 08 142Fvbl4ul382FANI 20250814095307
Spread the love

புதுதில்லி: லக்னௌவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுதில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானம், விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டிம்பிள் யாதவ் உள்பட 150க்கும் மேற்பட்டோர் விமானத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த குழுவினர், லக்னௌவில் இருந்து புதுதில்லிக்கு புறப்பட இருந்த 6E-2111 விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ரசாயன ஆலையில் தீ விபத்து – புகைப்படங்கள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *