தமிழ்நாட்டில் முதலீடு செய்கின்ற திட்டங்களுக்கு, எந்த தாமதமும் ஏற்படாது. எந்த தலையீடும் இருக்காது. கோவை வாரப்பட்டியில், ‘பாதுகாப்புத் துறை உபகரணங்கள் பூங்கா’ அமைத்திருக்கிறோம். சூலூரில், 200 ஏக்கர் பரப்பளவில், ‘வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் பூங்கா‘ அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
கணியூர் மற்றும் ராசிபாளையத்தில், ‘பன்முகப் போக்குவரத்து பூங்கா’வை அமைக்கப் போகிறோம். சூலூர் மற்றும் பல்லடத்தில், ‘செமிகண்டக்டர் பூங்கா’ அமைக்கப் போகிறோம். இன்று மட்டும் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 43,844 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.” என்றார்.