தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை… மருத்துவ குணம் மிக்கதா? | The Kalyanama Murungai (Indian Coral Tree) that grew naturally in my garden… does it have medicinal properties?

Spread the love

ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.

கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  ‘கல்யாண முருங்கை வடை’ அல்லது ‘முள் முருங்கை வடை’  செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள்.

ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும்.

ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும்.

கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது.

இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்… உங்கள் வீட்டில்  தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *