தோனியை முந்தினார் ரிஷப் பந்த் – புதிய சாதனை!

dinamani2F2025 07 242Ftg5zw9es2FGwnq9UkXIAAd Qo
Spread the love

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது. உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்தும் சாய் சுதா்சன் – ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார்.

வலியில் தவித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் சிறிது நேரம் போராடி 27 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியி விளையாடி கம்போஜ் ரன் ஏதுமின்றி வெளியேற நிதானமாக விளையாடிய தாக்குர் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *