"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

Spread the love

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது.

ஆனால், இம்முறை தோனி ஓர் ‘இம்பேக்ட் பிளேயராக’ (Impact Player) மட்டுமே ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக ஃபினிஷர் ரோலில் இளம் வீரர் கார்த்திக் சர்மா களமிறக்கப்படுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

தோனி
தோனி

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஷ்வின், தோனி ‘இம்பேக்ட் பிளேயராக’ விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஷ்வின், “தோனி அணியில் இடம் பெற்றால், அவர் நிச்சயம் ஆடும் 11 வீரர்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும்.

அவர் விளையாட விரும்பினால் முழுமையாக விளையாடட்டும், இல்லையென்றால் அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறலாம். ஆனால் ஒரு மாற்று வீரராக அவரைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது.

தோனி
தோனி

தோனி இப்போது 6-வது வரிசையில் இறங்கிப் பெரிய இன்னிங்ஸ் ஆடும் பேட்ஸ்மேனாக இல்லாவிட்டாலும், விக்கெட் கீப்பராகவும், களத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்க வேண்டியது அவசியம்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *