தோல் மற்றும் ஆயுத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவரது உரையில், “தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.