“தோழமை தொடர்வோம்; களத்தினில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!”- ஸ்டாலின் கடிதம்

Spread the love

மாரத்தான் ஓட்டத்தைப்போல நேர்காணல்

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது.

கழகத்தின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் விருப்பமனு அளித்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்திய தேர்தல்கள் உண்டு. அதன்பிறகு, மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக அழைத்து, மொத்தமாக நேர்காணல் செய்ததும் உண்டு. இந்த முறை, ஒவ்வொரு தொகுதிவாரியாக விருப்பமனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடைபெற்றது.

கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்!

உடன்பிறப்புகள் தங்கள் வாழ்த்துகளை எனக்குத் தெரிவித்தனர். உடன்பிறப்புகளின் உழைப்பையும் அனுபவத்தையும் மதித்து உங்களில் ஒருவனான நான் நேர்காணல் நடத்தினேன். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகள், அதனால் பெருகியிருக்கும் பொதுமக்களின் ஆதரவு, தோழமைக் கட்சிகளின் பலம், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த பணி இவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன்.

அண்ணா அறிவாலயம் – கலைஞர் அரங்கில் கழகத் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொரு தொகுதி உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று கழகத் தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.

உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.

உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் “தோழமை தொடர்வோம்; களத்தில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!”- ஸ்டாலின் அறிவிப்புகூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *