நகுலின் வாஸ்கோடகாமா டிரைலர்!

Dinamani2f2024 072f76ff972c Ddcb 4f50 Aa0f 3150a79f809f2fscreenshot202024 07 2120132113.jpg
Spread the love

நடிகர் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

2016, பிப்ரவரி 28 அன்று ஸ்ருதியைக் காதல் திருமணம் செய்தார் நடிகர் நகுல். ஸ்ருதி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் நகுல். ‘எரியும் கண்ணாடி’ மற்றும் ‘வாஸ்கோடகாமா’ என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருக்கின்றன.

இதில், வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் ஆர்ஜிகே இயக்கத்தில் உருவான இப்படத்தில் நகுலுடன் நடிகர்கள் ஆர்த்தனா பினு, கேஎஸ் ரவிக்குமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *