​​​​​​​நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல் | Comedian Madan Babu passes away

1371710
Spread the love

சென்னை: பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்​னையை சேர்ந்த மதன்​பாப்​பின் இயற்​பெயர் கிருஷ்ண​மூர்த்​தி. இசைக் குடும்​பத்​தைச் சேர்ந்த இவர் சினி​மாவுக்கு வரு​வதற்கு முன் இசைக் கலைஞ​ராக இருந்​தார். தனது சகோ​தரர் பத்​ம​நாபன் என்ற பாபுவுடன் இணைந்து ‘மதன் – பாபு’ என்ற பெயரில் இசைக்​குழுவை நடத்தி வந்​தார். இதனால் மதன் பாபு என்று அவரை அழைத்​தனர். அதுவே பின்​னர் மதன்​பாப் ஆனது.

‘நீங்​கள் கேட்​ட​வை’ படத்​தில் சிறிய வேடத்​தில் நடித்த அவர், ‘வானமே எல்​லை’ படம் மூலம் அறியபட்​டார். தொடர்ந்​து, தேவர் மகன், மகளிர் மட்​டும், பூவே உனக்​காக, கண்​ணுக்​குள் நில​வு, தெனாலி, பிரண்ட்​ஸ், சந்​திர​முகி, கிரி உட்பட 100-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நகைச்​சுவை மற்​றும் குணசித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார். இந்​தி, மலை​யாளப் படங்​களி​லும் நடித்​திருக்​கிறார்.

எப்​போதும் சிரித்​துக் கொண்​டிருப்​பது இவருடைய தனித்த அடை​யாள​மாகும். சன் டிவி​யில் ஒளிபரப்​பான ‘அசத்​தப்​போவது யாரு?’ நிகழ்ச்​சி​யில் நடு​வ​ராக​வும் செயல்​பட்​டுள்​ளார். இவருக்​குப் புற்​று​நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டு, அதற்​காக கடந்த சில மாதங்​களாக சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி நேற்று கால​மா​னார். அவரது உடல் அடை​யாறில் உள்ள வீட்​டில் பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. அவர் மறைவுக்கு ஏராள​மான திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். நடிகர் மதன்​பாப்​புக்கு சுசீலா என்ற மனை​வி, அர்ச்​சித் என்ற மகன், ஜனனி என்ற மகள் ஆகியோர்​ உள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *