நகைப்பிரியர்களுக்கு இன்றும் ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரன் ரூ.960 குறைவு – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உச்சத்தை தொட்டு வந்தது. 1 லட்ச ரூபாயை தாண்டி தங்கம் சவரனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருந்தது. 

இந்நிலையில், நேற்றைய தங்கம் சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520 -க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,440 விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

2வது நாளாக  சென்னையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *