நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரன் ரூ.1200 சரிவு – Kumudam

Spread the love

சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து வருகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,120க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், 18 காரட் தங்கம் விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.12,890க்கும், ஒரு சவரன் ரூ.1,03,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் சவரன் ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,7650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *