நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!

Spread the love

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது சல்பர் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறும். இவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.

அனல் மின் நிலையங்களின் புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறைக்கு ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் எனப் பெயர். காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக உலகளாவிய அனல் மின் நிலையங்களில் இந்த முறை பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஒரு மில்லியன் (10 லட்சம்) அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் 10 கி.மீ. சுற்றளவுக்கு வெளியே உள்ள அனல் மின் நிலையங்கள் இந்த முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக நச்சுத் துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை காற்று மாசுபாட்டிற்கே வழிவகுக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *