நடக்க முடியாத கணவரை 150 கி.மீ தோளில் சுமந்து செல்லும் பெண்.. வைரலாகும் வீடியோ!  | ட்ரெண்டிங்

Spread the love

Last Updated:

கன்வார் யாத்திரையில் பங்கேற்ற ஒரு பெண் நடக்க முடியாத தன் கணவரை 150 கி.மீ. தோளிலேயே தூக்கி சென்று தரிசனம் செய்தார்.

யாத்திரையில் கணவரை தூக்கி சென்ற பெண்
யாத்திரையில் கணவரை தூக்கி சென்ற பெண்

ழ்கன்வார் யாத்திரை முழு வீச்சில் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு பக்தி செலுத்தும் விதமாக  வட இந்தியாவில் ஆண்டுதோறும் சூலை 15 முதல் ஆகஸ்டு 15 வரை டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித கங்கை நீரை எடுத்து மகாதேவருக்கு வழங்க நீண்ட தூரம் பயணம் செய்கிறார்கள். இந்த புனித யாத்திரையிலிருந்து பல மனதைத் தொடும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் அன்பு, பக்தி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் மனதைத் தொடும் வெளிப்பாடாக, மோடி நகரில் உள்ள பகார்வா கிராமத்தைச் சேர்ந்த பெண், கன்வார் யாத்திரையின் போது தனது முடங்கிப்போன கணவரை 150 கி.மீ தூரம் முதுகில் சுமந்து செல்லும் காட்சி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கள் இரண்டு இளம் ஆண் குழந்தைகளுடன், ஆஷா தனது கணவர் சச்சினை சுமந்து கொண்டு ஹரித்வாரில் இருந்து மோடி நகருக்கு கால்நடையாக பயணத்தைத் தொடங்கினார். கடந்த ஆண்டு சச்சினுக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செயிருந்த நிலையில், அதன் பின்னர் அவருக்கு இடுப்பு முதல் கீழ் வரை செயலிழந்து விட்டது.

இந்த நிலையில்  சச்சினை அவரது மனைவி சுமந்து கொண்டு இந்த புனித யாத்திரைக்கு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஆஷாவிற்கு பாராட்டுகளையும், மரியாதையையும் பெருக்கெடுத்தது.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் அந்த பெண்ணில் கணவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, நாட்டில் உள்ள இதுபோன்ற பெண்களுக்கு பல வணக்கங்கள்” என்று கூறினார். மற்றொருவர் அந்தப் பெண்ணின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பக்தி பாராட்டுக்குரியது, அவர் விரைவில் உடல் நலம் பெறுவார் என ஆசிர்வதித்துள்ளார்.

மற்றொருவர், “பெண்களின் சக்தி, நம்பிக்கை மற்றும் பக்திக்கு வணக்கம். இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற ஒன்றைப் பார்ப்பது மனதிற்கு திருப்தி அளிக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.

“போலோ ஹர் ஹர் மகாதேவ்… ஜருர் சித் ஹோகி என்பது பெஹென் கி பிரார்த்தனா (அவளுடைய விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்)” என்று ஒருவர் கூறினார்.

ஒரு யூசர், “அவளுடைய விருப்பங்கள் நிறைவேற நான் சிவபெருமானிடம் பணிவுடன் பிரார்த்தனை செய்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்” என்று பதிவிட்டார்.   மற்றொரு யூசரோ, இது வெறும் யாத்திரை அல்ல, இது காதலும், பக்தியும், உறுதியும் கலந்து உருவான உறவு என்றும் இது போன்ற காதல் இன்னும் இருக்கிறதா? எனவும் ஆச்சரியத்துடனும் கருத்து கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *