சிதம்பரம்: குடியரசு நாள் விழாவையொட்டி, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்டது.
நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று(ஜன. 26) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க: மின் கம்பி அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி!
முன்னதாக, பொது தீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலர் உ. வெங்கடேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட் டது.
பின்னர், மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.