நடிகராக அறிமுகமாவது குறித்து இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “தேவி தெய்வத்தின் (அவர் இசையமைப்பாளராக முதலில் அறிமுகமான படத்தின் பெயர் இது) ஆசீர்வாதத்துடன் எனது இசை அறிமுகம் தொடங்கியது.
அது எனக்கு அனைவரது இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. அது உங்கள் குடும்பத்தில் என்னை ஒருவராக ஆக்கியது.
நீங்கள் மழை போல அள்ளித் தரும் அன்புக்காக எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
இப்போது மீண்டும் எல்லம்மா தெய்வத்தின் (அவர் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர்) ஆசீர்வாதத்துடன், ஒரு புதிய பயணம் தொடங்குகிறது.
உங்கள் இதயங்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கும் ஒரு தெய்வீக வாய்ப்பு. எல்லோரும் எனக்கு இன்னும் அதிக அன்பும் ஆசீர்வாதமும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது.” எனப் பதிவிட்டிருக்கிறார்.