நடிகரும் இயக்குநருமான தக்காளி சீனிவாசன் காலமானார் – பெங்களூரு ஆசிரமத்தில் உயிர் பிரிந்தது!

Spread the love

நடிகர், வசனகர்த்தா, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பல முகங்களாகப் பணிபுரிந்த “தக்காளி’ சீனிவாசன் நேற்று பெங்களூருவில் காலமானார். அவர் உடலடக்கம் இன்று நடக்கிறது.

நடிகை சரணயா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன முதல் படமான ‘மனசுக்குள் மத்தாப்பூ’ படத்தைத் தயாரித்தது இவர்தான். இப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே சரண்யாவுக்கு நாயகன் அறிமுகப் படமாக ரிலீஸ் ஆனது என்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆவதற்கு முன் பல படங்களில் குணச்சித்திர மற்றும் நெகடிவ் வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இவர். சூரசம்ஹாரம் படத்தில் இவரது நெகடிவ் கேரக்டர் பேசப்பட்டது எனச் சொல்லலாம்.

அசோகவனம் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்த சீனிவாசன், ‘நாளைய மனிதன்’ உட்பல சில படங்களுக்கு ‘பிரேமி – ஸ்ரினி’ என்கிற பெயரில் இசையமையக்கவும் செய்தார்.

‘மனசுக்குள் மத்தாப்பூ’ தவிர ஜென்ம நட்சத்திரம், அதிசய மனிதன், விட்னஸ் ஆகியவையும் இவர் தயாரிப்பில் வெளியான படங்களே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *