“நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்”- இயக்குநர் ஜீத்து ஜோசப் | “Actors are now showing interest in acting in pan-Indian films,” said director Jeethu Joseph.

Spread the love

“த்ரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” பாலிவுட் மட்டுமின்றி மற்ற சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பயப்படுகிறார்கள்.

'த்ரிஷ்யம்'

‘த்ரிஷ்யம்’

அப்படி நடித்தால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு இயக்குநராக நான் வித்தியாசமான படங்களை எடுக்க விரும்புகிறேன். ஹீரோக்கள் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்தால் நன்றாக இருக்கும்.

அதேபோல நடிகர்கள் தற்போது பான் இந்தியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரே விதமான கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்படைந்து விடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *