நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

Spread the love

நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தற்போது சலீம் கானுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. பாடலாசிரியான சலீம் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறது. மூளையில் இருக்கும் ரத்தக்கசிவை சரி செய்ய இன்று டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கின்றனர்.

நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பு உட்பட தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, தனது தந்தையை உடனிருந்து கவனித்து வருகிறார்.

சல்மான் கான் மருத்துவமனை வருகை

சல்மான் கான் மருத்துவமனை வருகை

சலீம் கானின் இன்னொரு மகன் அர்பாஸ் கான், மகள்கள் அர்பிதா கான், அர்விரா கான் மற்றும் சலீம் கானின் பேரக்குழந்தைகள், இரண்டு மனைவி ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். ச லீம் கான், எழுத்தாளர் ஜாவேத் அக்தருடன் இணைந்து, பாலிவுட்டில் புகழ்பெற்ற சலீம்-ஜாவேத் ஜோடிகளாக விளங்கினர். இருவரும் இணைந்து, 1970களில் தொடர்ச்சியாக இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதினர்.

அவர்களின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஷோலே ஒன்றாகும். இது இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஜோடி தீவார், சன்ஜீர் மற்றும் டான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கும் திரைவசனம் எழுதியது. அவர்களின் எழுத்து, கதை சொல்லும் முறைகளை மாற்றியது மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர்களின் அந்தஸ்தையும் உயர்த்தியது. 90 வயதாகும் சலீம் கான் 50 ஆண்டுகளாக பாலிவுட்டில் திரைவசனம் எழுதி வந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *