நடிகர் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிந்தனர்

image
Spread the love

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது சமீபகாலமாகவே அதிரித்து விட்டது. அவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொண்டாலும் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்ட விவாகரத்து செய்துவிடுகின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி

இந்த நிலையில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் – சைந்தவியின் 11 வருட காதல் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது,

gv prakash saindhavi beautiful moments1715670276 6

இருவரும் விவாகரத்து செய்து தனி தனியே வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நீண்ட யோசனைக்குப் பிறகு

நீண்ட யோசனைக்குப் பிறகு, திருமணமான 11 வருடங்களுக்குப் பிறகு நானும் சைந்தவியும் பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்து உள்ளோம்.

gv prakash saindhavi beautiful moments1715670275 5

எங்கள் தனிய உரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காதல் திருமணம்

ஜிவி பிரகாஷ், சைந்தவியை பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாள் காதலித்து பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு 2020ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

gv prakash saindhavi marriage photos goes trendy on social media1715665696 11

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *